அதிசய கரங்களில் விளையாடும் பீரளு
July 2012


பீரளு றேந்தை உருவாகும் குட்டித் தொழிற்கூடம் (பீரளு 
நூற்கட்டைகள், குண்டுசி, ஸ்டென்சில் மட்டை பொருத்திய 'பீரளு தலையணை"ஆகியவற்றை படத்தில் காணலாம்)

 காலி, மாத்தறை பிரதேசங்களுக்கு மதிய நேரத்தில் விஜயம் செய்தால், வீட்டின் முன்புறத்தில் பீரளு நூற்கட்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எழும் ஓசை தொலைவிலேயே உங்களுக்குக் கேட்கும். நீளக்கை உள்ள மேலங்கியும் கம்பாயமும் அணிந்த கிராமத்துப் பெண்மணிகள் பீரளு லேஸ் பின்னுவதில் மும்முரமாயிருக்கும் காட்சியை இப்பிரதேசத்தில் இன்றும் நீங்கள் காணலாம்.


விபரம்:
பவானி பாலா படங்கள்: றுமே~; பெரேரா


ஒல்லாந்துமொழிச் சொல்லாகிய 'றேந்தை", உள்@ர் மொழிவழக்கில் நிலையூன்றியிருப்பதை வைத்து இலங்கையின் பாரம்பரியக் கைத்தொழிலான பீரளு லேசிற்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையிலான தொடர்பை நாம் ஊகிக்க முடியும்.


எவ்வாறாயினும் பீரளு றேந்தையை இலங்கையில் முதன் முதலில் போர்த்துக்கேயரே அறிமுகப்படுத்தினர் என்றும், பின் 17ஆம் நூற்றாண்டளவில் ஒல்லாந்தரால் அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. ஒல்லாந்தரின் ஆட்சி மையமாக விளங்கிய மாத்தறை, காலி, மிரிஸ்ஸ, திக்வெல்ல, மாகல்லை போன்ற தென்பிரதேசங்களில் றேந்தை பின்னும் கலையை ஒல்லாந்துப் பெண்மணிகளிடமிருந்து அப்பகுதி வாழ் உள்@ர் பெண்கள் அதிகளவில் கற்றுக் கொண்டார்கள்.


பல வருடங்கள் கடந்தாலும் பீரளு றேந்தையில் தயாரித்த மேல்சட்டை, தலையணை உறை, கைக்குட்டை முதலியவைகளை சிலர் பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்திருக் கின்றோம். இது மட்டுமன்றி விருந்து வைபவங்களில் பீரளு றேந்தையில் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்து செல்வதைப் பெருமையாகக் கருதுபவர்களும் உள்ளனர்.

றேந்தை" எனும் ஓல்லாந்து மொழிச் சொல் உள்@ர் மொழிவழக்கில் நிலையுன்றியிருப்பது இலங்கையில் இக்கைத்தொழிலின் செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது


செவி வழியாகப் பலரும் இக்கலையைப் பற்றி புகழ்ந்துகூறக் கேட்டிருந்த எனக்கு, அதை எவ்வாறு செய்கின்றார்கள் என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இத்தடவை நிறைவேறியது. அவ்விடத்திற்கு சென்றதுதம் முதலில் என் கண்களை ஆக்கிரமித்தவை நூல் கோர்க்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்த ஏராளமான பீரளு கட்டைகள் (பொபின் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது).


கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட நூற்கட்டைகளைக் கவனம் சிதறாமல் ஒன்றுடன் ஒன்று கோர்த்தும் வளைத்தும் ஒரு அலங்காரத்தை உருப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த நடுத்தரவயதுப் பெண்மணி. அவர் றேந்தை பின்னும் நேர்த்தியையும் வேகத்தையும் பார்க்கையில் அந்தக் கரங்களில் ஏதேனும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதோ என்ற வியப்புக் கலந்த வினாக்குறி என்னுள் எழுந்தது! பீரளு கட்டைகளை நகர்த்துகையில் எழும் ஒலி கூட சிறந்த தாள லயத்தைக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.


பீரளு றேந்தை பின்னுவதற்கு முன்னதாக 'ஸ்டென்சில்" காகித அட்டையில் விசேட வகையான ஊசியினால் துளைகள் வடிவில் வேண்டிய வடிவத்தை வரைய வேண்டும். பின்னர் இந்தக் காகிதத்தைத் துணியால் சுற்றப்பட்ட 'பீரளு தலையணை" என்ற உருளை வடிவ மரக்குற்றி மீது பொருத்தி அதன்மேல் குண்டூசிகளை நிலைப்படுத்தி பீரளுவைக் கொண்டு றேந்தையைப் பின்னுகின்றனர்.

 

பீரளு றேந்தையில் தைத்த மகளிர் அணியும் ஆடைகள், சிறுவர் மேலாடைகள், மேசை விரிப்பு, புத்தகப் பை, சுவர் மாட்டி போன்றவை பலரது கண்களையும் கவருகின்றன. தற்கால நாகரிக யுகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆடைவடிவமைப்பில் பிற நுட்பங்களுடன் சேர்த்து பீரளு றேந்தையையும் உள்வாங்குகின்றனர்.


உதாரணமாக எம்ப்ரோய்டரி, அப்ளிக் வேலை, பீட்ஸ் வேலைப்பாடு ஆகியவற்றுடன் பீரளு றேந்தையும் கலந்து வடிவமைக்கப்படுகின்றது. இவ்வாறான தனித்துவமிக்க ஆடைகள் சந்தையில் அதிக மதிப்பையும் வரவேற்பையும் பெறுகின்றன. கவனத்துடன் கூடிய பொறுமையும் ஆர்வமும் உள்ள இளம்பெண்கள் பீரளு றேந்தை பின்னும் கலையை இலகுவில் கற்றுக்கொள்ள முடியும் என இக்கலையைக் கற்பிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆரம்ப காலங்களில் பழுப்பு வெண்ணிற தூய பருத்தி நூல்களில் மட்டுமே றேந்தை பின்னப்பட்டு வந்தது. இன்று நாகரிக மாற்றத்திற் கேற்றவாறு பல வர்ண செயற்கைப் பட்டு நூல்கள் தெரிவு செய்யப்படுகின்றன. 'ஸ்கலொப்" வடிவம், சமாந்தர வடிவம், வட்ட வடிவம் ஆகிய பிரதான மூன்று வடிவங்களில் றேந்தை தயாராகின்றது. அத்துடன் ஏறத்தாழ இருபதுக்கு மேற்பட்ட நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுவதாக இக்கலையில் பல வருட அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுகின்றனர்.


அப்பெண்மணி றேந்தை பின்னும் நேர்த்தியையும் வேகத்தையும் பார்க்கையில் அந்தக் கரங்களில் ஏதேனும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதோ என்ற வியப்புக் கலந்த வினாக்குறி என்னுள் எழுந்தது!


இலங்கையின் பீரளு றேந்தை தயாரிப்புகளுக்கு உள்@ர் சந்தையில் மட்டுமன்றி வெளியூரிலும் வரவேற்பு உள்ளது. தனித்துவ அம்சங்கள் பல உள்ளடங்கி இருப்பதனால் இக்கலையின் மிடுக்கு இன்னமும் மறையாது உள்ளது. தலைமுறை தலைமுறையாக இதனைக் கற்று வந்த பெண்கள் இப்பொழுதும் தமது ஓய்வு நேரத்தில் பீரளு றேந்தை பின்னுவதில் ஈடுபடுகின்றனர்.


மற்றைய கைத்தொழில்களைப் போலன்றி அதிக மாற்றங்களுக்குட்படாமல் பாரம்பரிய முறைமைகளே இதில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இக்கலையைக் கற்றுக்கொள்வதற்கும் அதைத் தொழிலாக மேற்கொள்வதற்கும் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளமை ஒரு குறைபாடாக இருந்தாலும், ஆங்காங்கே சில புதிய நுட்பங்களை உள்வாங்கியபடி இன்றும் இக்கலை தனிமதிப்புடன் நீடித்து வாழ்கின்றது என்று குறிப்பிட்டால் அது மிகையல்ல.


இந்த ஆக்கத்திற்கு வேண்டிய தகவல்களை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ('சில்ப") நிர்வாகத்தினர் வழங்கி உதவியிருந்தனர்.


This article features the delicate Sri Lankan traditional craft, 'Beeralu Lace'

  • image01
    image01

    டொய்லி வடிவத்தில் பின்னப்பட்ட'டேபிள் மட்"

    Prev Next
  • image01
    image01

    சேலையில் ஒரு அலங்காரம்

    Prev Next
  • image01
    image01

    ஸ்கலொப் வடிவ றேந்தையில் தயாரிக்கப்பட்ட விரிப்பு

    Prev Next
  • image01
    image01

    முடிச்சுக்கள் பற்றி அறிந்திருத்தல் பீரளு றேந்தை பின்னுவதில் முக்கியமானது

    Prev Next
  • image01
    image01

    நேர்த்தியாகப் பின்னப்பட்ட வண்ண வண்ண பீரளு றேந்தைகள்

    Prev Next
  • image01
    image01

    ஆண்கள் அணியும் கழுத்துப்பட்டியை அலங்கரிக்கும் பீரளு றேந்தை

    Prev Next
  • image01
    image01

    எம்ப்ரோய்டரியுடன் பீரளு றேந்தை கலந்து பயன்படுத்தப்பட்ட நவீன வடிவமைப்பு

    Prev Next